Skip to main content

கார்ப்பரேட் கான்செப்ட்!  திமுகவை தாக்கிய  தலைமைச்செயலாளர்! 

Published on 27/01/2020 | Edited on 27/01/2020

சென்னையில் நடந்த தேசிய வாக்களர் தினத்தில் திமுக மறைமுகமாகத் தாக்கிப் பேசிய தலைமைச்செயலாளர் சண்முகத்தின் பேச்சு அரசியல் வட்டாரங்களிலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 
                

தேசிய வாக்காளர் தினம் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 25- ந்தேதி நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்ற அந்த கூட்டத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, சென்னை மாவட்ட ஆட்சிய சீதாலெட்சுமி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் பள்ளி மாணவ- மாணவியர்களும் பெருமளவில் திரண்டிருந்தனர்.
                

இக்கூட்டத்தில் மைக் பிடித்த தலைமைச்செயலாளர் சண்முகம் தேர்தல் நடத்தைகள், சீர்த்திருத்தங்கள், தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டியதன் அவசியம் என பல்வேறு விசயங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, ‘’மக்களாட்சி முறையில் சீர்கேடுகள் வருவதற்கு காரணமே மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதுதான். அவைகள் மெல்ல மெல்ல மாறி வருகிறது. முன்பெல்லாம் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருக்கும். தற்போது வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நல்ல ஒரு மாற்றம். ஆனாலும், தேர்தலில் மக்களின் ஈடுபாடுகளில் மாற்றம் வரவேண்டும். நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டும். 
 

national voters day celebrating chief secretary shanmugam speech dmk party

அரசியல் லாபங்களுக்காக சாதி, மதங்களை பயன்படுத்தும் அபாயம் உருவாகியிருக்கும் நிலையில் இன்னொரு அபாயமும் உருவாகியிருக்கிறது. அதாவது, உண்மையற்ற பொய்யான செய்திகளை மீண்டும் மீண்டும் பதிவு செய்து மக்கள் மனதில் பதிவு செய்கின்றனர். மார்க்கெட்டில் பொருட்களை விற்பதற்காகத்தான் விளம்பர யுக்தியை பயன்படுத்துவர். அந்த விளம்பர யுக்திகள் தற்போது அதிகாரத்திற்காக அரசியலில் பயன்படுத்தும் சூழ்நிலை இன்று உருவாகியிருக்கிறது. இது, எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. அரசியல் ஆலோசகர்கள் என சிலர் செயல்படுகின்றனர். 
 

கட்சியிலுள்ள நம்முடைய ஆட்கள் சொல்ல முடியாத தகவல்களையா அரசியல் ஆலோசகர்கள் சொல்லிவிடப் போகிறார்கள்? மக்களுக்கு என்ன தேவை என்பதை மக்களிடம் போய் கேட்டாலே தெரிந்துவிடும். அதனை செய்யாமல் இதற்காக ஒருவரை அழைத்து வந்து, அவரை அரசியல் ஆலோசகராக நியமித்து, அவர் ஆய்வு செய்து சொல்வதும், அதற்கேற்ப அரசியல் நடத்துவதும் இப்போது நடக்கிறது ’’ என தற்கால அரசியல் குறித்து விளக்கமாகப் பேசினார் தலைமைச்செயலாளர் சண்முகம்.    

national voters day celebrating chief secretary shanmugam speech dmk party

அரசியல் குறித்து அவருடைய பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை உருவாக்க, அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் விளக்கத்தை தேடி விவாதித்துக்கொண்டனர் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள். நம்மிடம் பேசிய முதன்மை செயலாளர் அந்தஸ்திலுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், ‘’தேசிய அளவிலான அரசியலை கார்ப்பரேட் நிறுவனம் தான் முடிவு செய்கிறது. அந்த வகையில், பிரதமர் மோடி துவங்கி பல்வேறு தலைவர்களுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர்கள் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். அது ஒரு கார்ப்பரேட் அரசியலாகவே உருமாறி நிற்கிறது. 


அந்த வகையில் கடந்த 2016 தேர்தலில் அரசியல் ஆலோசகர் என்கிற கான்செப்ட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்காகவும், பாமக அன்புமணிக்காகவும் தனித்தனி டீம் களமாடியது. தற்போது அந்த கான்செப்ட்டில் திமுகவுக்காக களமிறங்கியிருக்கிறது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். திமுகவின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருப்பதாக திமுகவே ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் அரசியல் ஆலோசகர் என தலைமைச்செயலாளர் சண்முகம் தாக்கிப் பேசியிருப்பது திமுகவின் கார்ப்பரேட் கான்செப்டை மனதில் வைத்துதான். தலைமைச்செயலாளராக இருப்பவர் பிரதான எதிர்க்கட்சியின் அரசியலை மறைமுக தாக்கியிருக்கிறாரே என அதிகாரிகளுக்கெல்லாம் அதிர்ச்சிதான் ‘’என விவரித்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரிக்கு புதிய தலைமைச் செயலாளர் நியமனம்!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Puducherry appointed new Chief Secretary

புதுச்சேரிக்கு புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக ராஜீவ் வர்மா பணியாற்றி வந்தார். இந்நிலையில் ராஜீவ் வர்மா சண்டிகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றும் சரத் சவுகான் புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Next Story

“நிலுவையில் இருந்த பிரச்சனைகளை பா.ஜ.க அரசு தீர்த்து வைத்துள்ளது” - பிரதமர் மோடி

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
PM Modi says The BJP government has resolved the pending issues

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அந்த வகையில், இன்று (25-01-24) தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, இளம் வாக்காளர்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், “அடுத்த 25 ஆண்டுகளில் நாடு மற்றும் உங்களின் எதிர்காலத்திற்காக உறுதி ஏற்க வேண்டும். உங்களின் வாக்கு எதிர்கால இந்தியாவையும், நாட்டின் பாதையையும் நிர்மாணிக்கும் சக்தி பெற்றவை. நாட்டின் பெரும்பான்மையுடன் ஆட்சி அமையும்போது, அரசு எடுக்கும் கொள்கை மற்றும் முடிவுகள் தெளிவானதாக இருக்கும். மேலும், நிலையான அரசு பெரிய முடிவுகளை எடுக்கும். அந்த வகையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்சனைகளை பா.ஜ.க அரசு தீர்த்து வைத்துள்ளது.

PM Modi says The BJP government has resolved the pending issues

உலகத் தலைவர்களை சந்திக்கும்போது, நான் மட்டும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதாக கருதவில்லை. 140 கோடி மக்களும் என்னுடன் இருப்பதாக உணர்ந்துகொண்டு தான் அவர்களை சந்திக்கிறேன். கடந்த 10,12 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் நிலவிய சூழ்நிலை, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. ஆனால், இன்று வெற்றிக் கதைகள் குறித்து பேசப்படுகிறது. இளைஞர்களின் கனவுதான் எனது இலட்சியம். இது மோடியின் வாக்குறுதி” என்று கூறினார்.