Skip to main content

ஜூலை 20 முதல் தேசிய அளவிலான லாரிகள் வேலைநிறுத்தம்

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

டீசல் மற்றும் பெட்ரோல் மீதான வரி விதிப்பை குறைக்க வலியுறுத்தி வரும் ஜூலை 20 முதல் தேசிய அளவிலான வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக அகில இந்திய டிரான்ஸ்போர்ட் கார்ப்ரேஷன் முடிவு செய்துள்ளது.

 

lorry

 

டெல்லியில் டீசல் மற்றும் பெட்ரோல் மீதான வரிவிதிப்பு குறைப்பது தொடர்பான கூட்டத்தின் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய கார்ப்பரேஷன் உறுப்பினர் சண்முகப்பா கூறுகையில்  ஜூலை 20 முதல்  லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற இருப்பதாகவும் இதில் நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள் பங்கேற்கும் எனவும் கூறினார்.

 

மேலும் டீசல் மற்றும் பெட்ரோல் மீதான வரிவிதிப்பின் காரணமாக பல லாரிகள் ஓடாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல்  காப்பீட்டு கட்டணம் 120 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதையும், கட்டணத்தை ஆண்டிற்கு ஒருமுறை செலுத்த அனுமதிக்க கோரியும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம் என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்