சென்னை தலைமைச் செயலகத்தில் 2020- 2021 ஆம் கல்வியாண்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 389 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் அடையாளமாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதேபோல், நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு 52 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக மூன்று பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Advertisment