Skip to main content

6 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

Published on 11/06/2018 | Edited on 11/06/2018
stalin

 

தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. 

 

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது தொடர்பாக ஏற்கனவே  கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் சரவணன்,  கலீல் ரகுமான், சோட்டையன், வேல்முருகன்,  இஷ்ரப், முகமது யூனிஸ்  ஆகிய 6 பேரையும்  உள்துறை செயலாளர் உத்தரவின் பெயரில்  கைது செய்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணா பிறந்தநாளையொட்டி 12 சிறைவாசிகள் விடுதலை

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
12 prisoners released on Anna's birthday

அண்ணா பிறந்த நாளை ஒட்டி தமிழகத்தில் உள்ள சிறைகளில் நீண்ட காலமாக சிறையில் உள்ள 12  சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 12 சிறைவாசிகளையும் விடுவிக்கத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கடலூர், கோவை, வேலூர், புழல் ஆகிய சிறைகளில் இருந்து மொத்தம் 12 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் சிறையில் நீண்ட காலமாக உள்ள செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கோவையிலிருந்து ஆறு சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பூரி கமல், விஜயன், அபுதாஹிர், ஹாரூன் பாட்ஷா, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கோவை சிறைத்துறை எஸ்.பி தகவல் வெளியிட்டுள்ளார். வேலூர் சிறையில் இருந்து ஸ்ரீனிவாசன் என்பவரும், புழல் சிறையில் இருந்து ஜாகீர் என மொத்தம் 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

அண்ணாவின் நினைவு தினம்; அமைச்சர் அன்பில் மகேஷ் மரியாதை

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Minister Anbil Mahesh pays homage to Anna statue on her memorial day

திருச்சியின் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநகர செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் உருவ சிலையில் இருந்து சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மௌன ஊர்வலமாகச் சென்று பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Minister Anbil Mahesh pays homage to Anna statue on her memorial day

இந்நிகழ்வில்  மாநில, மாவட்ட மாநகர நிர்வாகிகள்  அரங்கநாதன, சேகரன், செந்தில் பகுதி செயலாளர் மோகன் மற்றும் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்