Skip to main content

தேசிய அளவில் செயற்கைகோள் வடிவமைப்பு போட்டி... அரசு பள்ளி மாணவர்கள் பரிந்துரைத்த பொருட்கள் விண்ணில் ஏவப்பட்டது!

Published on 21/01/2020 | Edited on 21/01/2020

தேசிய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு குழு (NDRF) நடத்திய இந்திய அளவிலான செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டியை வலைதளம் (ஆன்லைன்) வாயிலாக நடத்தியது. இதில் செயற்கை கோளுக்கான பொருட்களை பரிந்துரைக்க வேண்டும். அது புதுமையாகவும், எளிமையானதாகவும் இருக்க வேண்டும். அந்த பொருள் 3.8 செ.மீ அளவிலான பெட்டியில் பொருந்தும் வண்ணம் அமைய வேண்டும் என்ற விதிமுறைகளை விதித்தது.
 
போட்டியில்இந்தியா முழுவதிலிருந்தும் ஏறத்தாழ 3000 பள்ளிகள் பங்கேற்றள்ளனர். தமிழகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கெடுத்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள அரசு உதவிபெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் இதில் கலந்துகொண்டு பரிந்துரை செய்த பொருட்களில் இரண்டு தேர்வு செய்யப்பட்டது.

National Satellite Design Competition ... Launched by Government School Students


தமிழகத்திலிருந்து 6 குழுக்கள் தேர்வுபெற்ற நிலையில் சிதம்பரம்ஆறுமுக நாவலர் பள்ளி இரண்டு குழுக்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளது  குறிப்பிடதக்கது. இதில் ஒரு பொருள் சிமெண்டால் கட்டப்பட்ட சுவரையோ, தளத்தையோ இடித்து நிலத்தில் .போடுவதால்அதன் மூலம் மழைநீர் மண்ணுக்குள் இறங்குவது தடுக்கப்படுகிறது. இதுவும் பிளாஷ்டிக் போல் மழைநீரை பூமிக்கு அனுப்பாது. அதனால் விண்ணுக்கு சிமெண்டை அனுப்பி அங்குள்ள மாற்றத்தை ஆராய்வதன் மூலம் இங்குள்ள கான்கிரிட் கழிவுகளை அழிக்கவோ மறுசுழற்சி செய்வதற்கான வழிகளை ஆராய்ச்சி செய்யும் நோக்கிலும் இரண்டாவது பொருள் பென்சிலின் என்ற உயிர் எதிர் பொருளை(ஆன்டிபயோடிக்) விண்வெளியில் தங்கி ஆராய்ச்சிகள் செய்யும் வீரர்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் புவியிலிருந்து இராக்கெட் மூலமாக அனுப்பப்படுகிறது.

 

National Satellite Design Competition ... Launched by Government School Students


மாற்றாக இத்தகைய உயிர் எதிர்பொருளை அங்கேயே உருவாக்க முடிந்தால் நேரம் மற்றும் பொருட்செலவு பெருமளவில் குறையும். இதற்கான ஆய்வுசெய்வதற்கு பென்சிலின் என்ற பூஞ்சை தேர்வு பெற்றது. தேர்வு செய்யப்பட்ட பொருட்களை விண்ணுக்கு அனுப்பும் நிகழ்ச்சி கடந்த 19-ந்தேதி வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன், சந்திரயான் திட்டஇயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், என்டிஆர்எப் இயக்குநர் டில்லிபாபு உள்ளிட்ட இந்தியா அளவில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இருந்து தேர்வு பெற்ற பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 

National Satellite Design Competition ... Launched by Government School Students

 

இதுகுறித்து என்டிஆர்எப் திட்ட இயக்குநர் டில்லிபாபு கூறுகையில் தேர்வு பெற்ற பொருட்களை ஹீலியம் காற்று நிரப்பட்ட பலுன் மூலம் விண்ணுக்கு அனுப்பபட்டுள்ளது. இது பூமியில் இருந்து 3 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்தப்படும். ஒரு மாதத்திற்கு பிறகு பாரஷீட் மூலம் எடுத்து வந்து விண்ணில் நடைபெற்ற மாற்றதினால் பொருட்களின் தன்மை குறித்து சம்பந்தபட்ட பள்ளி மாணவர்களுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் பங்குபெற்ற தமிழகம் சார்பில் சிதம்பரம் ஆறுமுகநாவலர் பள்ளி மாணவர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர் வேல்பிரகாஷ் பள்ளியின் செயலாளர் அருள்மொழிச்செல்வன் உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வாழ்த்துகூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.