"பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்" - போலீஸ் கமிஷனர்

national rifle association of india coach practice club trichy

திருச்சி ரைபிள் கிளப்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பை திருச்சி ரைபிள் கிளப் தலைவரான மாநகர காவல் ஆணையரால்தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப் கடந்த 31.12.2021-ம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருச்சி ரைபிள் கிளப்பில் (NRAI -National Rifle Association of India) தெற்கு மண்டலம் சார்பாக ரைபிள் மற்றும் பிஸ்டலுக்கான ஒரு வார காலம் (21.05.23 முதல் 27.05.23 வரை) துப்பாக்கி சுடும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இச்சிறப்பு பயிற்சி வகுப்பிற்கான துவக்க விழா நேற்று (21.05.2023) திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்றது. இதில் திருச்சி ரைபிள் கிளப் செயலாளர் செந்தூர்செல்வன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் மூத்த துணை தலைவர் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கத்தின் தலைவர் சீதாராமராவ், NRAI-ன் இணை செயலாளர் மற்றும் NRAI-ன் கல்வி திட்டத்தின் இயக்குநர் பவன்சிங், பயிற்சியாளருக்கான கல்வி திட்டத்தின் மேலாளர் அனந்த்முரளி, தகவல் தொடர்பின் பயிற்றுநர் .இந்திராஜித்சென் ஆகியோர்கலந்து கொண்டார்கள்.

national rifle association of india coach practice club trichy

இப்பயிற்சி வகுப்பு துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி ரைபிள் கிளப் தலைவரும், மாநகர காவல் ஆணையருமான M.சத்திய பிரியா, இ.கா.ப.,கலந்துகொண்டு இப்பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகையில், "எந்தவொரு போட்டியிலும் சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதில் பயிற்சியாளரின் பங்கு முக்கியமானவை.இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் சிறப்பாக பயிற்சி பெற்று சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்கியும், பல நாடுகளில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள செய்தும், இந்திய திருநாட்டிற்கு ரைபிள் மற்றும் பிஸ்டல் சுடும் பிரிவுகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்" என வாழ்த்தி பேசினார்.

மேலும் இப்பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்த 30 நபர்கள் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளதாகவும், இப்பயிற்சி வகுப்பில் பயின்றும், தேர்வில் தேர்ச்சி பெறுபவர் அடுத்த கட்ட பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துக்கொண்டார்.

COACHING police trichy
இதையும் படியுங்கள்
Subscribe