அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ராம. கதிரேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, " மார்ச் 14,15 மற்றும் 16-ஆகிய தேதிகளில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழு (NAAC COMMITTEE) ஆய்வு செய்ய உள்ளார்கள். இந்த தரச்சான்றானது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும். இதற்க்காக இந்தியா முழுவதிலும் இருந்து 7 பேர் கொண்ட வல்லுநர்கள் குழு ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கு முன் 2000ம் ஆண்டு நான்கு நட்சத்திர குறியீடும் (****), 2007ம் ஆண்டு B++ ம், 2014ம் ஆண்டு A Grade ம், பெற்றது, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிவது இது 4-வது முறை ஆகும்.

Advertisment

இந்த முறை A++ Grade கிடைக்க ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் மாணவர்களின் கல்வி தரம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், மேற்படிப்புக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவும் மற்றும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பெறும் நிதி நிலை மேம்படவும், தொலை தூர கல்வி இயக்ககம் தடை இல்லாமல் செயல் படவும் அவசியமாகிறது. இதில் தேர்வு கட்டுபாட்டு அதிகாரி பிரகாஷ், துணைவேந்தரின் நேர்முக செயலர் பாக்கியராஜ் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி இரத்தின சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.