National policy on customs collection should be followed

தாம்பரம் – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரணூர், ஆத்தூர் சுங்கச் சாவடிகளின் ஒப்பந்தக் காலம் 2019ஆம் ஆண்டு முடிவடைந்துவிட்டதால், அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (09.04.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை எனகருத்து தெரிவித்த நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்க முடியாது என நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர்.மேலும், ஃபாஸ்டேக் முறை எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும் எனவும், இதுகுறித்து மக்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Advertisment

National policy on customs collection should be followed

மேலும், சுங்க கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கையைப் பின்பற்ற வேண்டும் எனவும், சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும்நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். நெடுஞ்சாலைகளில் வாகன நெருக்கம் இல்லாத வகையில் மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி, வழக்கின் அடுத்த விசாரணை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.