Advertisment

மரம் நடுபவர்கள் குறைவு பயன்படுத்துவோர் அதிகம்... தேசிய ஒரு செடி நடும் தின விழா

தேசிய ஒரு செடி நடும் தினம் மார்ச் 12. புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று இளைஞர்கள் படை கிளம்பியுள்ளது. காரணம் கஜா புயல் பல கோடி மரங்களை மரணிக்க வைத்துவிட்டது தான். கஜாவால் இழந்த மரங்களை மீட்டெடுப்போம் என்றும், புவி வெப்பமயமாதலை தடுப்போம் என்றும் கிராமங்கள் தோறும் புறப்பட்டுவிட்டார்கள் இளைஞர்கள்.

Advertisment

tree

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இதேபோல தான் புயலுக்கு முன்பே புறப்பட்ட இயக்கம் கிரீன் நீடா..

தேசிய ஒரு செடி நடும் தினத்தை இரு நாட்கள் முன்னதாக 10.03.2019 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காமராஜர் காலனி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தலைமையில் நடைபெற்றது. இணை ஒருங்கிணைப்பாளர் இராம.கந்தசாமி வரவேற்றார். வடுவூர் கரிகாலன் உழவர் உற்பத்தியாளர் நிறுவன மேலாளர் ராஜா, சமூக ஆர்வலர்கள் வீரையன், இராம.அன்பரசு முன்னிலை வகித்தனர். மரக்கன்றுகளை வீடுகள் தோறும் சென்று வழங்கிய ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ராமச்சந்திரன் பேசுகையில்,

tree

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மரங்கள் நடுபவர்கள் உலகில் குறைவாகத்தான் இருக்கின்றனர். ஆனால் மரங்களை பயன்படுத்த நிறைய பேர் இருக்கிறார்கள். மனிதனின் பயன்பாட்டுக்காக மரம் தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறது. மரங்கள் நடுவது நிலையான தர்மத்திற்கு ஒப்பானது. மரங்கள் வளர்க்க முயற்சிப்பவர்களுக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இயற்கை வளங்களை நிச்சயமாக பாதுகாக்க முடியும் என்றார்.

விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அப்போது பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைக்கும் ஒரு கன்று கொடுங்கள் என்று வாங்கிச் சென்று நட்டனர் பெற்றோர்கள்.

விழாவில் திருவள்ளுவர் நகர் கிரீன் நீடா அமைப்பாளர் செ.இளந்தமிழன், பிரபாகரன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பொறுப்பாளர்கள் ராஜகுமாரி, ஜெனித்தாராணி, சுகுணா கார்த்திக், மீனாகுமாரி மரக்கன்றுகளை பெற்று மரங்களாக்குவோம் என உறுதி அளித்தனர். கிரீன் நீடா இயக்குனர் இராம.ரெங்கநாதன் நன்றி கூறினார்.

Nature Life save nature tree World environment day
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe