தமிழகத்தில் அமையவுள்ள புதிய 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிப்படை சான்றிதழை தமிழக சுகாதாரத்துறை தேசிய மருத்துவ ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணைய குழு இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்த பின் அனுமதி சான்றிதழ் வழங்கும் என கூறப்படுகிறது.
அனுமதி சான்றிதழ் கிடைத்தவுடன் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுமதி கிடைத்தால் தமிழகத்தில் 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.