Skip to main content

தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

 

 தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

 

h


இந்த சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்டவை. மீதமுள்ள சுங்கச்சாவடிகள் 2008-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டவை. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்தப்படி வருடத்துக்கு ஒருமுறை சுங்கச் சாவடியில் பயனாளர் கட்டணத்தை அதிகபட்சமாக 10 சதவீதம் உயர்த்திக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  அதன்படி 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், 2008-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 1992-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அடங்கின.

 

செப்டம்பர் மாதம் பிறந்ததை தொடர்ந்து 2008-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008-ன் படி, தமிழகத்தில் உள்ள பாளையம் (கிரு‌‌ஷ்ணகிரி-தோப்பூர் சாலை), நல்லூர் (சென்னை-தடா), வைகுந்தம் (சேலம்-குமாரபாளையம்), எலியார்பத்தி (மதுரை-தூத்துக்குடி), கொடைரோடு (திண்டுக்கல்-சமயநல்லூர்), மேட்டுப்பட்டி (சேலம்-உளுந்தூர்பேட்டை), மண்வாசி (திருச்சி-கரூர்), விக்கிரவாண்டி (திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை), பொன்னம்பலப்பட்டி (திருச்சி-திண்டுக்கல்), நத்தக்கரை (சேலம்-உளுந்தூர்பேட்டை), புதூர் பாண்டியபுரம் (தூத்துக்குடி-மதுரை), திருமந்ததுரை (உளுந்தூர்பேட்டை-பாடலூர்), வாழவந்தான் கோட்டை (திருச்சி-தஞ்சை), வீரசோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை), விஜயமங்கலம் (குமாரபாளையம்-செங்கம்பள்ளி) 15 சுங்கச்சாவடிகளில் நேற்று கட்டணம் உயர்ந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து; தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Tanker truck overturned incident  

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு டேங்கர் லாரி ஒன்று ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த டேங்கர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேலுமலை கணவாய் என்ற இடத்தில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்தது.

இதனையடுத்து டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கு உள்ளான லாரியில் இருந்த ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த டேங்கர் லாரியில் மேலும் ஒருவர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி மற்றும் சூளகிரி தீயணைப்புத் துறையினர், டேங்கர் லாரியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து குருப்பரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

'நெடுஞ்சாலைத்துறை பணிக்காக' - அதிகாரிகள் போல் உலோகத் தடுப்பான்களைத் திருடிய கும்பல் கைது 

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Kumbam arrested for 'highway department work'- collecting metal barriers as officials

 

சாலையோரம் விபத்துகளைத் தடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ள உலோகத் தடுப்பான்களை நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் போல் ஏமாற்றி திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகளின் ஓரத்தில் விபத்துகளையும், மண் சரிவுகளையும் தடுக்கும் வகையில் உலோகத் தடுப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை சில பகுதிகளில் சேதமடைந்த நிலையிலும் காணப்பட்டது. சில நாட்களாக இந்த உலோகங்கள் காணாமல் போனது நெடுஞ்சாலைத் துறையினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலை பணியாளர்கள் ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 

அப்போது பாண்டூர் கிராமத்தின் சாலை பகுதியில் ஐந்து பேர் சந்தேகத்திற்கு இடமாக சாலையோர தடுப்பான்களைக் கழட்டிக் கொண்டிருந்தனர். உடனடியாக போலீசாருக்கு நெடுஞ்சாலைத்துறை தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் ஐந்து பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் அனைவரும் சாலையோரத்தில் உள்ள உலோகத் தடுப்பான்களைத் திருடி வண்டிகளில் அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் வந்த வாகனத்தில் 'நெடுஞ்சாலைத் துறை பணிக்காக' என போர்டும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் ஐந்து பேரும் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் அல்ல.

 

ஐந்து பேரையும் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், பூபாலன், சங்கர், கார்த்திக், சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு நாளுக்கு முன்னதாகவே வந்து உலோகத் தடுப்பான்களின் போல்டுகளை கழட்டி வைத்துவிட்டுச் சென்று விடுவர். அடுத்த நாள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் போன்று கழட்டி வைக்கப்பட்ட உலோகத் தடுப்பான்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்வர். இதுவரை 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான உலோகத் தடுப்பான்களை இந்த கும்பல் திருடியுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு இவர்கள் பயன்படுத்திய லாரி மற்றும் மினி வேன் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் இதேபோன்று வேறு ஏதேனும் இடங்களிலும் திருட்டில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.