Advertisment

தேசியநல்லாசிரியர் விருது!! தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டுமே தேர்வு!!

Tamilnadu

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

தமிழகத்தை சேர்ந்தஷதிஎன்ற ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் சார்பில் 6 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்குபரிந்துரை செய்யப்பட்ட நிலையில் கோவையை சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரான சக்தி என்பவர் மட்டும் இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்துதேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

வரும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்க இருக்கிறார். இந்த விருது பெறுவோருக்கு50 ஆயிரம் ரூபாய், விருது சான்றிதல்,சில்வர் மெடல் வழங்கப்படும். ஆண்டுதோறும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய நல்லாசிரியர் விருதுவழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

கடந்த ஆண்டு தேசிய அளவில் 350 பேருக்கும் அதில் தமிழத்தில் இருந்து22 பேருக்குநல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 45 பேருக்குத்தான் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட இருக்கிறது. அதிலும் தமிழகத்திலிருந்து ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Award kovai teachers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe