Advertisment

மதநம்பிக்கையால் தேசியக் கொடி ஏற்ற மறுத்த பள்ளி தலைமை ஆசிரியர்; நான்கு ஆண்டுகளாக தொடரும் அவலம்  

national flag

Advertisment

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ளது பேடரஅள்ளி ஊராட்சி. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 282 மாணவர்கள் படித்து வருகின்றனர். 13 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தலைமை ஆசிரியராக தமிழ்ச்செல்வி உள்ளார்.இந்நிலையில் நாடுமுழுவதும் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடிக்கொண்டு இருந்தபொழுது, பேடரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தன்னால் இந்திய தேசிய கொடியை ஏற்றமுடியாது என கூறிய சம்பவம் பெரும் பேசுபொருளுக்கு உள்ளானது.

சுதந்திர தின விழா இப்பள்ளியில் கொண்டாடப்பட்ட போது ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனுசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் யசோதா மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சுதந்திர தின விழாவில் உரிய நேரம் வந்ததும் தலைமை ஆசிரியரை அங்கு இருந்தவர்கள் கொடியேற்ற சொன்ன போது அங்கு இருந்த வேறொரு ஆசிரியர் கொடியேற்றியுள்ளார். அதற்கு தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, தான் பின்பற்றும் மத நம்பிக்கையில் தான் தேசியக் கொடியை ஏற்றவில்லை. என்னால் வேறு எந்த அடையாளத்தையும் வணங்க முடியாது என்பதால், தேசியக் கொடியை ஏற்றாமல் வேறு ஒரு ஆசிரியரை ஏற்றக் கூறினேன். ஆனால் நான் தேசிய கொடிக்கு மதிப்பு அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

Advertisment

கடந்த சுதந்திர தினத்தன்று அப்பள்ளியின் மற்றொரு ஆசிரியர் முருகன் என்பவர் கொடியை ஏற்றினார்.தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி அப்பள்ளியில் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆனது என்பதும் நான்கு ஆண்டுகளும் அப்பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்கள் தான் கொடிஏற்றுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடியேற்றாததை கண்டித்து ஊர் பொது மக்கள் சார்பில் முதன்மை கல்வி அலுவலரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற ஆண்டு முதல் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் தான் கோடி ஏற்றுவர் . மற்றபடி அரசின் அனைத்து சட்டமும் எனக்கு பொது தான் என்று கோரியுள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று அப்பள்ளியின் மற்றொரு ஆசிரியர் முருகன் என்பவர் கொடியை ஏற்றினார்.

தலைமையாசிரியர் தமிழ்செல்வி அப்பள்ளியில் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆனது என்பதும் நான்கு ஆண்டுகளும் அப்பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்கள் தான் கொடிஏற்றுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடியேற்றாததை கண்டித்து ஊர் பொது மக்கள் சார்பில் முதன்மை கல்வி அலுவலரிடம் நடவடிக்கை எடுக்க கோரி இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தேசியக்கொடியை ஏற்றிவைக்கும்போது, சாதிய பாகுபாடு இன்றி நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் பேடரஅள்ளி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையின் இந்த செயல் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது

Tamilnadu flag
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe