Skip to main content

மதநம்பிக்கையால் தேசியக் கொடி ஏற்ற மறுத்த பள்ளி தலைமை ஆசிரியர்; நான்கு ஆண்டுகளாக தொடரும் அவலம்  

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

national flag

 


தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ளது பேடரஅள்ளி ஊராட்சி. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 282 மாணவர்கள் படித்து வருகின்றனர். 13 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தலைமை ஆசிரியராக தமிழ்ச்செல்வி உள்ளார். இந்நிலையில் நாடுமுழுவதும் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடிக்கொண்டு இருந்தபொழுது, பேடரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தன்னால் இந்திய தேசிய கொடியை ஏற்றமுடியாது என கூறிய சம்பவம் பெரும் பேசு பொருளுக்கு உள்ளானது. 

 

சுதந்திர தின விழா இப்பள்ளியில் கொண்டாடப்பட்ட போது  ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனுசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் யசோதா மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

சுதந்திர தின விழாவில் உரிய  நேரம் வந்ததும் தலைமை ஆசிரியரை அங்கு இருந்தவர்கள் கொடியேற்ற சொன்ன போது அங்கு இருந்த வேறொரு ஆசிரியர் கொடியேற்றியுள்ளார். அதற்கு தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, தான் பின்பற்றும் மத நம்பிக்கையில் தான் தேசியக் கொடியை ஏற்றவில்லை. என்னால் வேறு எந்த அடையாளத்தையும் வணங்க முடியாது என்பதால், தேசியக் கொடியை ஏற்றாமல் வேறு ஒரு ஆசிரியரை ஏற்றக் கூறினேன். ஆனால் நான் தேசிய கொடிக்கு மதிப்பு அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

 

கடந்த சுதந்திர தினத்தன்று அப்பள்ளியின் மற்றொரு  ஆசிரியர் முருகன் என்பவர் கொடியை ஏற்றினார். தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி அப்பள்ளியில் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆனது என்பதும் நான்கு ஆண்டுகளும் அப்பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்கள் தான் கொடிஏற்றுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடியேற்றாததை கண்டித்து ஊர் பொது மக்கள் சார்பில் முதன்மை கல்வி அலுவலரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற ஆண்டு முதல் பள்ளியில் உள்ள  மற்ற ஆசிரியர்கள் தான் கோடி ஏற்றுவர் . மற்றபடி அரசின் அனைத்து சட்டமும் எனக்கு பொது தான் என்று கோரியுள்ளார். கடந்த சுதந்திர தினத்தன்று அப்பள்ளியின் மற்றொரு  ஆசிரியர் முருகன் என்பவர் கொடியை ஏற்றினார். 

 

தலைமையாசிரியர் தமிழ்செல்வி அப்பள்ளியில் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆனது என்பதும் நான்கு ஆண்டுகளும் அப்பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்கள் தான் கொடிஏற்றுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடியேற்றாததை கண்டித்து ஊர் பொது மக்கள் சார்பில் முதன்மை கல்வி அலுவலரிடம் நடவடிக்கை எடுக்க கோரி இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர தினத்தன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தேசியக்கொடியை ஏற்றிவைக்கும்போது, சாதிய பாகுபாடு இன்றி நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி இருந்தார்.  இந்நிலையில் பேடரஅள்ளி  அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையின் இந்த செயல் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது  

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.