ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா முழுக்க 75வது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திரத்தின் பவள விழா கொண்டாட்டம் நாடு முழுக்கம் கலைகட்டியது. அதேபோல், கோவையில் சுதந்திரத் தின பவள விழா பேரணி நடைபெற்றது. கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கோவை ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் வரை இப்பேரணி நடைபெற்றது.
பின்னர், கீதா ஹால் சாலையிலுள்ள காமராஜ் பவனில், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றினார். ஏற்றப்பட்ட தேசியக் கொடி தலைகீழாக இருந்தது. இதைப் பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் உடனடியாக அதனைக் கம்பத்திலிருந்து இறக்கிச் சரி செய்தனர். அதன்பின் மீண்டும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.