நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அனைத்து இடங்களிலும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரு தினங்களில் கோவிலின் கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில் 77 ஆவது சுதந்திர தின நாளில் காலையில் தேசியக்கொடிக்குக் கோவில் தீட்சிதர்கள் கோவில் கருவறையில் பூஜை செய்து மேளதாளம் முழங்க வெள்ளி தாம்பூலத்தில் எடுத்து வந்து 152 அடி உயரமுள்ள கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்கள். இதனைத் தொடர்ந்து அனைவரும் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்த பட்டொளி வீசி பறந்தது கோடி.

Advertisment