Advertisment

பாஜக கொடிக் கம்பத்தில் பறந்த தேசியக் கொடி

The national flag flew on the BJP flagpole!

இந்தியாவின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, வீடு தோறும் மூவர்ணக் கொடி என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தினர். அதேபோல், தேசியக் கொடியை ஏற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு வழிமுறைகளை அரசு சார்பில் ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் விதிமுறையை மீறி பாஜக கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை அப்பகுதி பாஜக நிர்வாகிகள் பறக்கவிட்டுள்ளனர். மேலும், அருகில் அமைந்துள்ள நாம் தமிழர் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளின் கொடிகளுக்கு மிகவும் தாழ்வாக தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ அப்பகுதி பொதுமக்களால் சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வைரலாகி வருவதுடன், தேசியக் கொடியை அவமரியாதை செய்து விட்டதாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்துவருகிறது.

Advertisment

karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe