Skip to main content

பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி!

Published on 26/01/2020 | Edited on 26/01/2020

இந்திய நாட்டின் 71- வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் அந்தந்த மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். 

national flag celebrating 71th republic day tamilnadu in chennai


அதன் தொடர்ச்சியாக சென்னை மெரினா காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியேற்றினார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபால், துணை சபாநாயர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் தமிழக டிஜிபி திரிபாதி, தலைமை செயலாளர் சண்முகம், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் விழாவில் கலந்துக்கொண்டனர். 

national flag celebrating 71th republic day tamilnadu in chennai


தேசியக் கொடியேற்றி வைத்த ஆளுநர் முப்படை அணி வகுப்பு, காவல்துறை, என்சிசி என 48 படை பிரிவுகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அலங்காரக ஊர்திகளின் அணி வகுப்பு இடம் பெற்றது. விழாவில் காவலர் பதக்கம், அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சிறந்த காவல் நிலையத்திற்கான விருது, வேளாண் துறையின் சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

national flag celebrating 71th republic day tamilnadu in chennai


அதன்படி காவல் ஆய்வாளர் பூங்கோதை உள்ளிட்டோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தை வழங்கினார். மேலும் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை கோவை நகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. அதேபோல் நாகை தீயணைப்புத்துறை ஓட்டுநர் ராஜாவுக்கு  வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. நாகையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிவதர்ஷினி என்ற 2 வயது குழந்தையை உயிருடன் மீட்டதால் விருது.
 

national flag celebrating 71th republic day tamilnadu in chennai


மேலும் ஏகேஸ், பிரிஸ்டன் பிராங்கிளின், வினித், சார்லிபன், ஈஸ்டர் பிரேம் குமார், திருவள்ளூரை சேர்ந்த தனலட்சுமி, வினோதினி, தஞ்சை தம்பதி இந்திரா காந்தி, பழனியப்பன் ஆகியோருக்கும் அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டது.

national flag celebrating 71th republic day tamilnadu in chennai

திருச்சியில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஷாஜ் முகமதுக்கு கோட்டை அமீருக்கு மத நல்லிணக்க விருதை முதல்வர் வழங்கினார். பதக்கம், விருது பெற்றவர்களுடன் முதல்வர் பழனிசாமி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.