Advertisment

'தேசிய கல்விக் கொள்கை தமிழ்மொழி வளர்ச்சிக்கு மிகவும் உதவும்'-பிரதமர் மோடி பேச்சு!  

bjp

Advertisment

பிரதமர் மோடி 31,500 கோடி ரூபாயில் 11 திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கும் நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்பொழுது தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஒரே மேடையில் இடம்பெற்றனர்.

11 திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் உரையாற்றுகையில், ''தமிழ்நாடு மண் என்பது சிறப்பு வாய்ந்த மண். இங்கு மக்களின் கலாச்சாரம், மொழி எல்லாமே தலை சிறந்தது. மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருவது சிறந்த ஒன்று. ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தலைசிறந்தவர்களாக உள்ளனர். தமிழ்மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்பிரிக்கா வரை தமிழகத்தின் பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை. செவித்திறன் குறைந்தோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தின் பாரம்பரிய உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்தார் இந்த மண்ணின் மைந்தன் எல்.முருகன். எரிவாயு குழாய் திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்படுகிறது. எதிர்கால தேவைகளை நோக்கமாகக் கொண்டு நவீன திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கலங்கரை திட்டத்தின் கீழ் வீடு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

bjp

Advertisment

சென்னையைப் போன்று இந்தியாவின் பிற இடங்களிலும் சரக்கு முனையம் கட்டப்படும். ஏழைகளின் நலனை உறுதி செய்வதற்காகவே அனைத்து உட்கட்டமைப்பு துறைகளிலும் திட்டங்களை நிறைவேற்றுகிறோம். தலைசிறந்த உட்கட்டமைப்புகளே சிறந்த எதிர்காலத்தை அளிக்கும். உட்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்த நாடுகள் வளரும் நாடுகளிலிருந்து வளர்ச்சியடைந்த நாடுகளானது. ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிவேக இணைய சேவையை கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளோம். 7.5 லட்சம் கோடி மூலதன செலவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிவேக இணைய சேவை, எரிவாயு வழித்தடம், சாலை கட்டமைப்பு புதிய பாதைகளில் வளர்ச்சிக்கு பயணிக்கிறோம். உட்கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்துவதால் இந்தியாவின் இளைஞர்கள் பெரும் பயன்பெறுவீர். தேசிய கல்விக் கொள்கை தமிழ்மொழி வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. பனாரஸ் பல்கலைக்கழகம் எனது வாரணாசி தொகுதியில் உள்ளது. தேசிய கல்விக் கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிகளை தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும். இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் உதவிகள் செய்யப்படும். யாழ்ப்பாணத்திற்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான்'' என்றார்.

Tamilnadu modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe