Advertisment

மருத்துவர்கள் தினம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

national doctors day cm mk stalin wishes

Advertisment

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவர்களுக்குத்தனது வாழ்த்துகளைத்தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வராக இருந்த டாக்டர் பிதான் சந்திர ராய் பிறந்த தினத்தை தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1882 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி பிறந்த இவர் 1962 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தனது 80வது வயதில் மறைந்தார். இதையடுத்து இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவர்கள் தினம் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டிவிட்டரில், “தன்னலம் கருதாது உலகத்து உயிர்களின் உடல் நலனும் உள்ள நலனும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள். மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் திமுக அரசு செய்து கொடுக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.

Doctors
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe