National Doctor's Day at Chidambaram Government Hospital ..!

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ‘இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி’ சிதம்பரம் கிளை சார்பில் 'தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சார் ஆட்சியரும், ரெட் கிராஸ் தலைவருமான மதுபாலன் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட அனைத்து மருத்துவர்களின் சேவைகளையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

Advertisment

தலைமை மருத்துவர் அசோக் பாஸ்கர், ரெட் கிராஸ் சேர்மன் ராஜேந்திரன், செயலர் நடராஜன், பொருளாளர் கமல்சந்த் கோத்தாரி மற்றும் அவ்வமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். அதேபோல், தன்னார்வ இரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன், தன்னார்வலர் சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Advertisment