சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் தேசிய டெங்கு ஒழிப்பு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.