சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனறி தேர்வில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக மாணவர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில் வட்டார கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஜான்சன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி வரவேற்றார். சிதம்பரம் சரவணபவா கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் சண்முகம் பங்கேற்று இந்த ஆண்டுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் குணசேகர், சக்திவேல், விக்னேஷ், தினேஷ் ஆகியோருக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியைகள் ரமா, அனுராதா, பிரான்சிஸ் சேவியர், இலக்கியா, அன்னலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.