national anthem that stopped the fight between DMK and BJP

அம்ரித் எக்ஸ்பிரஸ் ரெயில் அயோத்தியில் கடந்த 30 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி 2 அம்ரித் எக்ஸ்பிரஸ் ரெயில்களை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அதில் ஒரு அமரித் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்கு வங்க மாநிலம் மாவட்டத்தில் புறப்பட்டு 5 மாநிலங்கள் இணைக்கும் முறையிலாகும். மற்றொன்று மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களை இணைக்கிறது.

Advertisment

இந்த ரயில் கடந்த 30ஆம் தேதி புறப்பட்டு 32 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது . இதனுடைய பயண நேரம் 42 மணி நேரம் ஆகும் இதில் எட்டு பெட்டிகள் உட்காரும் வசதி கொண்டதாகவும் 12 பெட்டிகள் படுக்க வசதி கொண்டதாகவும் உள்ளது. இந்த ரயில் 110 கிலோமீட்டர் இருந்து 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.

Advertisment

இந்த ரயில் மால்டாவால் இருந்து பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா டவுன் வரை 2247 கிலோ மீட்டர் பயணிக்கிறது. இந்த அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரி1 ஆம் தேதி மாலை 17.34 மணிக்கு ஜோலார்பேட்டை ரெயில்வே நிலையம் வந்தடைந்தது. அப்போது இதனை வரவேற்க பாரதிய ஜனதா கட்சியினரும் அதேபோல் திமுகவினரும் கலந்து கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ரயில்வே துறை அதிகாரிகள் செய்வதறியாமல் நின்றவர்கள் பின்னர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த தேசிய கீதம் பாடல் ஒலிக்கப்பட்டதால் அமைதியாகினர். இதன் காரணமாக அப்போது சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது

Advertisment