Skip to main content

வங்காவிற்கு பங்கா.. புதிய பாடப்புத்தகத்தில் பல பிழைகளுடன் நாட்டுப்பண்!

Published on 19/06/2019 | Edited on 19/06/2019

தமிழக அரசு வெளியிட்டுள்ள 1 மற்றும் 2 ஆம் வகுப்பு புதிய பாடப்புத்தகத்தில் நாட்டுப்பண் பல இடங்களில் பிழைகளுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது.

 national Anthem printed with Spelling mistake in the textbook


கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ள. இந்நிலையில் 1 ஆம் வகுப்பு மற்றும் 2 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ள ஜன கண மன என தொடங்கும் நாட்டுப்பண் பாடல் பல இடங்களில் எழுத்துப்பிழையாக அச்சிடப்பட்டுள்ளது.

 national Anthem printed with Spelling mistake in the textbook


'திராவிட உத்கல வங்கா'' என்கிற வரியில் வங்கா என்ற வார்த்தைக்கு பதிலாக பங்கா என அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல் ''உச்சல ஜலதி தரங்கா'' என்கிற வரியில் ஜலதி என்ற வார்த்தைக்கு பதில் சலதி என தவறாக அச்சிடப்பட்டுள்ளது. மேலும் பாடலின் இறுதியில் ''ஜன கண மங்கள தாயக ஐய ஹே'' என்ற வரிக்கு பதிலாக ''ஜன கண மன அதிநாயக ஜய ஹே'' எனும் பாடலின் முதல் வரியே திரும்ப இடம்பெற்றுள்ளது. இப்படி வார்த்தைகள் பிழையுடன் அச்சிடப்பட்டிருப்பது மட்டுமின்றி வரியே பிழையாக இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   

 

 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் கத்தார் தமிழர் சங்கத்திற்கு பாடப்புத்தகம் வழங்கல்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
TN Govt to provide textbooks to the Qatar Tamil Society

கத்தார் தமிழர் சங்கத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் தமிழ் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான 5 ஆயிரத்து 450 தமிழ் பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (13.03.2024) கத்தார் தமிழர் சங்கத்திற்கு வழங்கினார். இப்புத்தகங்களை கத்தார் தமிழர் சங்க நிர்வாகிகளான லட்சுமி மோகன் (ஒருங்கிணைப்பாளர்), அடிலாஸ் மகேந்திரன், செந்தில் (வளைகுடா தமிழ்ச்சங்கம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் கஜலட்சுமி மற்றும் இணை இயக்குநர் சங்கர சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story

“பாடப் புத்தகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு” - கர்நாடக அரசு

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
“Biography of Father Periyar in Text Book” - Government of Karnataka

கர்நாடகாவில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசு கடந்த 2022 - 2023 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களின் வரலாறு புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் பலராம் ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றிருந்தன. அதே சமயம் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், கேரளாவைச் சேர்ந்த நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகியோர் குறித்த தகவல்களும், சமுதாய முன்னேற்றத்துக்கான இலக்கியங்களைப் படைத்த எழுத்தாளர்களின் கதை மற்றும் கவிதைகளும் நீக்கப்பட்டன. இந்த செயல் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி அரசுக்கு அளித்த பரிந்துரையின் படி 2024 - 2025 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களை கர்நாடக காங்கிரஸ் அரசு மாற்றம் செய்துள்ளது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில், கர்நாடகத்தில் உள்ள கன்னட மொழிப் பாடங்களில் முற்போக்கு தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 10 ஆம் வகுப்பு வரலாறு பாடத் திட்டத்தில், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, சமூகப் பணிகள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சாவித்ரிபாய் பூலே, திப்பு சுல்தான், பசவண்ணர், விஸ்வேவரய்யா ஆகியோரின் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளன.