Advertisment

தவறி கீழே விழுந்த நத்தம் விஸ்வநாதன்! 

Natham Viswanathan who fell down!

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக, நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், இன்று (08/07/2022) காலை ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்திற்கு சென்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின், ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

Advertisment

அப்போது, அனைவரும் பேசிக் கொண்டு நடந்துசென்றுகொண்டிருந்த போது, நத்தம் விஸ்வநாதன் காலில் மாட்டிக் கொண்ட பிளாஸ்டிக் கவரால் தவறி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், அவரை தூக்கிவிட்டு, தண்ணீர் வழங்கி இருக்கையில் அமரச் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

incident Leader admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe