கோவில் தூய்மை பணியாளரிடம் ஏடிஎம் கார்டு மூலம் நூதன முறையில் ரூ 25 ஆயிரம் திருடிய புரோகிதர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சிதம்பரத்தில் நிகழ்ந்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் குளக்கரையில் சிதம்பரம் கிழக்கு புதுத் தெருவைச் சேர்ந்த அமிர்தகடேஸ்வரன். 35 வயதான இவர் புரோகிதராக உள்ளார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவிலில் தூய்மை பணி செய்துவரும் விஜயா என்ற பெண்ணிடம் அவரது சுருக்குப் பையிலிருந்த ஏடிஎம் கார்டை நூதன முறையில் திருடி, அதிலிருந்த ரூபாய் 25 ஆயிரத்தை திருடியுள்ளார். இதுகுறித்து விஜயா அளித்த புகாரின் அடிப்படையில் இன்று அமிர்தகடேஸ்வரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.