சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisment

natarajar temple festival

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சனம் மற்றும் மார்கழியில் ஆருத்ரா தரிசனம் என ஆண்டுக்கு இருமுறை தேர் மற்றும் தரிசனம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று மார்கழி ஆருத்ரா தரிசன தேர் மற்றும் தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. வரும் 9ஆம் தேதி தேர்த்திருவிழாவும், பத்தாம் தேதி தரிசன விழாவும் நடைபெறும். இவ்விழாவில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்வார்கள்.