/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chidambaram_28.jpg)
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய சிதம்பரம் நகரத்தையொட்டியுள்ள பழைய புவனகிரி சாலையைச் சேர்ந்தஜெயசீலா (37) வந்துள்ளார். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய முயன்றார். ஆனால் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது எனக் கூறி தீட்சிதர்களில் சிலர் ஜெயசீலாவை தடுத்து ஆபாசமாக பேசியும் சாதிரீதியாக திட்டி, தாக்கி வெளியே அனுப்பியதாக தீட்சிதர்கள் மீது வெளியேற்றினார்கள் என ஜெயசீலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் பெண்ணை தாக்கி வெளியேற்றிய 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை மாலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலில் கோவில் தீட்சிதர்களே தாக்கிக் கொண்டது, பெண்ணை தாக்கி வெளியே அனுப்பிய சம்பவம் குறித்து காவல்துறையினர் கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குஎன தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிதம்பரம் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள சிவ பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)