
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர் திருவிழா இன்று அதிகாலை முதல் விமர்சியாக நடைபெற்றது. தேர் திருவிழா கரோனா தொற்று காரணமாக கோவிலுக்குள்ளே நடத்திக் கொள்ள வேண்டும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தேர் திருவிழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும்,தேர் திருவிழா நடத்துவதற்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது என சனிக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் தேர் திருவிழாவிற்கு அனுமதி அளித்து தேர் திருவிழாவில் குறைந்த அளவு பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், திருவிழாவில் கலந்து கொள்ள உள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் தடுப்பு ஊசியை செலுத்தி இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டனர்.
அதனடிப்படையில் இன்று தேர்த்திருவிழா சிதம்பரத்தின் முக்கிய வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக தேர் தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிவபக்தர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆனால் தமிழக அரசு கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியது அதிகம் பேரால் கடைபிடிக்கப்படவில்லை. 90 சதமானத்திற்கு மேல் பக்தர்கள், பொதுமக்கள், தீட்சிதர்கள் என யாரும் முக கவசம் அணியவில்லை, கரோனா தடுப்பு நடவடிக்கையும் கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)