Advertisment

நிறைவேறியது நடராஜனின் ‘கனவுத் திட்டம்’; உற்சாகத்தில் ரசிகர்கள்

Advertisment

Natarajan's 'Dream Project' Completed; Fans in excitement

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் செயல்படவுள்ள இந்த மைதானத்தின் தொடக்க விழா வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

Advertisment

இந்த விழாவின் தொடக்க விழா அழைப்பிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் நடராஜன் பகிர்ந்துள்ளார். மேலும் "எனது கனவுத்திட்டமான நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழாவை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் அஷோக் சிகாமணி, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் செயலாளர் பழனி, சிஎஸ்கே அணியின் சிஇஓ விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் முன்னாள் செயலாளர் ராமசாமி உள்ளிட்ட முக்கிய நபர்கள் வருகிறார்கள். இவர்களோடு நடிகர் யோகிபாபுவும் கலந்து கொள்கிறார்.

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தில் நான்கு செண்டர் பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் 100 பார்வையாளர்கள் அமரக்கூடிய ஒரு மினி கேலரி போன்றவையும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நடராஜனின் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

cricket Natarajan
இதையும் படியுங்கள்
Subscribe