
ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக களம் இறங்கி சாதனை படைத்த தமிழக வீரர் நடராஜன், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டிக்கு வருகை தரவுள்ளார். குதிரை பூட்டிய சாரட் வண்டியில்அவரை ஊர்வலம் அழைத்துச் செல்லபொதுமக்கள் ஏற்பாடுசெய்துள்ளனர்.

அவரை வரவேற்பதற்காக சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவரும் உற்சாகமாக திரண்டுள்ளனர். இன்று காலை தமிழகம் திரும்பிய நடராஜன் ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்படும் முன் கரோனாபரிசோதனை செய்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வருவதால் விதிகளின்படி நடராஜன் 14நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என சேலம் சின்னப்பம்பட்டியில் உள்ள நடராஜனின் பெற்றோரை சந்தித்து வட்டார மருத்துவர் அன்புச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார்.
சின்னப்பம்பட்டி பேருந்துநிலையத்திலிருந்து அவரை வீடு வரைக்கும் பேரணியாக அழைத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தபொதுமக்கள்,அவரது வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Follow Us