Advertisment

பெசன்ட் நகர் இல்லத்தில் நடராஜன் உடல்! பொதுமக்கள் அஞ்சலி

nadarajan

சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்கு மார்பு பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு மார்ச் 16ம் தேதி சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், நடஜரானின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. நள்ளிரவு 1.30 மணிக்கு நடராஜன் உயிரிழந்தார். நடராஜனின் உடல் எம்பார்மிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு எம்பார்மிங் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. அஞ்சலி செலுத்துவதற்காக பெசன்ட் நகர் இல்லத்தில் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

Advertisment

காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

Advertisment
Besant Nagar body civilians Natarajan Respected
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe