/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ttv.jpeg)
சசிகலாவின் கணவர் நடராஜன் படத்திறப்பு விழா, இன்று காலை 10.30 மணியளவில் தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த விழாவில், கவிஞர் வைரமுத்து, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2018-03-30 at 10.18.46.jpeg)
விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய டிடிவிதினகரன், சசிகலா நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல தியாகங்களைச் செய்தவர் நடராஜன். சசிகலாவுக்கு மாப்பிள்ளை பார்த்தபோது, டாக்டர்கள், இன்ஜினியர்கள் எனப் பல வரன்களைப் பார்த்தனர். நடராஜன் நல்லவர் என்பதால், அவரை என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சசிகலாவுக்குத் திருமணம் செய்து வைத்தனர் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)