சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழாக்கள் நடைபெறும்.அதேபோல் இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா 20 மற்றும் 21ஆம் தேதிகளில் தரிசனம் நடைபெறுகிறது. இதனையொட்டி செவ்வாய் காலை கோயிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.