நடராஜர் கோவில்; ஏலம் விடப்படுகிறதா தீட்சிதர் பூஜை முறை?

Nataraja Temple; Is there an auction during Dikshitar Puja?

சிதம்பரம் நடராஜர் கோவிலில், கோவில் தீட்சிதர் தர்ஷன் என்பவர் சனிக்கிழமை மதியம் நடராஜர் கோவில் உள்ளே கோவில் செயலாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவரது தந்தை கணேசனின் பூஜை முறை இன்று இதனை மற்ற தீட்சிதர்கள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம் விட்டதாகவும், அந்த பூஜை முறையை அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து கோவில் தீட்சிதர்கள் கூறுகையில், இவர் கோவிலுக்கு எதிராக செயல்பட்டார். அதனால் இவரை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளோம். ஆகையால் இவருக்கு பூஜை முறை அளிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். கோவில் செயலாளர் அலுவலகம் முன்பு கோவில் தீட்சிதர் தர்ணாவில் ஈடுபட்டது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe