நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவிக்கு, மீண்டும் கோகிலா என்ற படத்தில் நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது.
சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றிருந்தார்.
ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. ஆந்திராவின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு கிடைத்தது.
இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI) விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது. 2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியும் கவுரவித்தது.