Advertisment

மதுரை வருகிறார் மோடி - தமிழிசை சௌந்திரராஜன் பேட்டி

narendra_modi

Advertisment

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,

பிரதமர் நரேந்திரமோடி ஜனவரி 27ஆம் தேதி மதுரை வருகிறார் என்று தகவல் வந்திருக்கிறது. அதிகாரப்பூர்வமாக இன்று காலைதான் இந்த தகவல் எங்களுக்கு வந்திருக்கிறது. பல லட்சம் தொண்டர்கள் இணைந்து மிகபெரிய மாநாடு நடத்த இருக்கிறோம்.

ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை நாங்கள் துவங்கிவிட்டோம். பிரதமர் மோடி வருவது மிகப்பெரிய மாநாடாக அமையும், மிகப்பெரிய பிரச்சாரமாக அமையும். மோடியின் வருகை எங்கள் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் உற்சாகத்தை தரும். மற்ற பயணத்திட்டங்கள் பற்றி திட்டமிட்டப் பிறகு சொல்கிறேன்.

Advertisment

கூட்டணி குறித்து இன்னும் முழுமையாக முடிவு செய்யப்படவில்லை. கூட்டணி வைத்துத்தான் போட்டியிடுவோம். கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது. காலஅவகாசம் இருப்பதால் தெளிவாக முடிவு எடுப்போம். பாஜகவின் முழுக் கவனமும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதில் உள்ளது. திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக 6ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

madurai Narendra Modi tamil isai soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe