Skip to main content

கோவை வந்தடைந்தார் மோடி

Published on 09/04/2019 | Edited on 09/04/2019
MODI

 

அதிமுக பாஜக கூட்டணி சார்பாக நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி விமானம் மூலம் கோவை வந்துள்ளார்.

 

கோவை வந்துள்ள மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உட்பட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

 

பாஜக தேர்தல் பரப்புரை கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற இருக்கிறது. அதிமுக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து  தேர்தல் பிரச்சாரம் செய்ய மோடி கோவை வந்துள்ளார் மோடி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடரும் சோகம்; வெள்ளியங்கிரி மலையேறுவோர் கவனத்திற்கு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Ongoing Tragedy; Attention Velliangiri Mountaineers

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், தொடர்ந்து சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளியங்கிரி  மலை  மீது ஏற முயன்ற மூன்று பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (68) வயது. மருத்துவரான இவர் நேற்று நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். இன்று காலை நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த மூன்று பேரின் சடலங்களையும் கீழே கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 3 பேர் இதற்கு முன்னதாகவே இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதயக் கோளாறு, மூச்சுத்திணறல் பாதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.