பாராளுமன்றத் தேர்தலையொட்டி பாஜகவின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனவரி மாதம் இறுதியில் வருகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடியோ கான்பரஸ் மூலமாக மோடி பொறுப்பாளர்களுடன் பேசி வருகிறார். இந்த நிலையில் தனது பாராளுமன்ற பிரச்சாரத்தை தொடங்கதிட்டமிட்டுள்ள நரேந்திர மோடி, ஜனவரி மாதம் இறுதியில் தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்கி வைக்க வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.