Narcotics supply... North State youths arrested

Advertisment

தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை ஆகியவற்றை தடுக்கும் விதமாகஅனைத்து மாவட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் சில இடங்களில் தடையை மீறி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகே போதைப் பொருட்கள் விற்பனை என்பதை தமிழக போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்டவற்றை விற்பனை செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் 1500க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை அண்ணா நகர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.