Narcotic assailant assaulted Tasmac employee

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள பூத்தாம்பட்டி என்னும் கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்றுசெயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடையின் விற்பனையாளராகமல்வார்பட்டியைச் சேர்ந்தபாலமுருகன்என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நேற்று புத்தாண்டு தினத்தில்மதுபானம் அதிகளவில் விற்பனையானது. மாலை நான்கு மணிக்கு இரண்டு இளைஞர்கள் மதுபானத்தை (பீர்) வாங்கிச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் திரும்பி வந்த அவர்கள் தாங்கள் வாங்கியது புளிக்கிறது என்றும் வேறு பாட்டில் தருமாறும் கூறியுள்ளனர்.

Advertisment

இதனால் கடைக்காரருக்கும் இளைஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தான்கொண்டு வந்த பாட்டிலை உடைத்துவிட்டு கடைக்காரரைத்தாக்கியுள்ளார். இவை அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவானது. தொடர்ந்து இளைஞர்கள் சிசிடிவி கேமிராவையும் உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் வேடசந்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.