கொள்ளை, திருட்டுக்களை தடுக்க 10 சிறப்பு வாகனங்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா, புதுச்சேரியில் அதிக அளவில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், அதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதால் அவற்றை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் நடைபெறும் அதிக அளவு கொள்ளை சம்பவங்களில் வெளி மாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததை தொடர்ந்து காவலர் ரோந்து பணியையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ரோந்து செல்லும் காவலர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் காவலர் ரோந்து பணிக்கு 10 சிறப்பு வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டப் பேரவையில் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)