Advertisment

காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம்  மூலம் நிரப்புவது குறித்து நாராயணசாமி ஆலோசனை

puvana

காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவது குறித்து நாராயணசாமி ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

Advertisment

மழை பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்யும் வகையில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வின் மூலம் உடனடியாக நிரப்புவது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

Advertisment

இக்கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச்செயலர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் மற்றும் அனைத்துத் துறை செயலர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் புதுச்சேரி அரசில் காலியாக உள்ள பணியிடங்கள், அவற்றை உயர்வு அளிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், வழக்குகள் ஆகியவற்றை நிரப்புவதற்கான முறைகள், சில பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு

குறித்து தலைமைச் செயலர் மற்றும் அனைத்துத் துறை செயலர்கள் எடுத்துரைத்தனர்.

மாநில வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், பொதுமக்களின் சிரமங்களை குறைப்பதற்காகவும், புதுச்சேரியில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் அரசு வேலைவாய்ப்பினை பெறுவதற்காகவும் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படவேண்டிய சுமார் 800 காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படியும், அதற்கான அறிவிப்புகளை விரைவாக ஒரு மாதத்திற்குள் வெளியிடும்படியும் முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார். மேலும் அனைத்துத் துறையிலும் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வு குறித்து உரிய காலத்தில் நடவடிக்கைகளை எடுக்குமாறும், அதற்கான கோப்புகளை அரசுக்கு சமர்ப்பிக்கும்படியும் துறை செயலர்களைக் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்துவதில் அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானதாகும். பல்வேறு அரசுத் துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதால், வளர்ச்சிப்பணிகள் பாதிப்படையாமல் இருப்பதற்காக அவற்றை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

narajayanasamy puthuvai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe