Advertisment

 ஆளுநராக நீடிக்க கிரண்பேடிக்கு  தகுதியில்லை என மக்களுக்கு தெரிந்துவிட்டது -முதல்வர் நாராயணசாமி பேட்டி! 

n

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

Advertisment

’’கடந்து போன 2018-ஆம் ஆண்டில் புதுச்சேரிக்குரிய நிதி கிடைக்கவில்லை என்றாலும் திட்டமில்லா செலவினங்கள் மூலம் பல துறைகளில் புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு ஒத்துழைப்பு இன்றியும், துணைநிலை ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகத்தை தாண்டியும் அரசு சிறப்பாக செயல்படுகிறது.

Advertisment

சமூக வலைதளங்களில் கிரண்பேடி தவறான தகவல்களை தருவதை மக்கள் உணர்ந்து விட்டனர். ஆளுநராக நீடிக்க அவருக்கு தகுதியில்லை என மக்களுக்கும் தெரிந்துவிட்டது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் பொங்கல் பொருட்கள் வழங்க வேண்டும் என அமைச்சரவை முடிவு செய்தது. ஆனால் ஆளுநர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டுமென அமைச்சரவைக்கு தெரியாமல் திட்டத்தில் மாற்றம் செய்தார். அதனால் தான் அவர் ஆளுநராக நீடிக்க தகுதியில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும். ’’

narayansamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe