பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை வாளகத்தில் நடைபெற்றது. இதில் காவல் துறை டி.ஜி.பி சுனில்குமார் கௌதம் சட்டத்துறை செயலர், அரசுத்துறை வழக்கறிஞர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment

Narayanasamy

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

புதுச்சேரி மாநிலத்தில் பெண்கள் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைஇதுபோன்று நடக்கக்கூடியவழக்குகள் எவ்வளவு நிலுவையில் இருக்கிறதுஎன்பதை அறிந்து விரைவில் தீர்வு காணப்படும். இதுகுறித்து தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும். பெண்களுக்கு ஏதிரான வழக்குகளில் ஆறு மாதத்தில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.