Advertisment

'இது அதிர்ச்சியளிக்கிறது; இனி இடம் தரக் கூடாது' - திமுக தலைவர் ஸ்டாலின் வேதனை! 

nannilam incident... DMK Stalin's tweet

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், 'உங்கள்மகனால்உங்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்து'எனஜோதிடர் கூறியதை நம்பி, 5 வயது மகனைமண்ணெண்ணெய் ஊற்றிபெற்ற தந்தையேஎரித்து நரபலியிட்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அண்மைக் காலமாகவே இதுபோன்றநரபலி சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களிலும் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஆந்திராவில் கல்வித்துறையில் பணியாற்றும் பெற்றோர்களே, இரண்டு மகள்களைநரபலியிட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

நன்னிலத்தில் நடைபெற்றஇந்தநரபலி சம்பவத்திற்கு அதிருப்தி தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், 'மகனால் ஆபத்து நேரலாம் என ஜோதிடர் கூறியதால், நன்னிலத்தில் தனது 5 வயது மகனை தந்தையே எரித்துக் கொன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது! காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, இனி நரபலிகளுக்கு இடம் தரக் கூடாது! மெய்ப்பொருள் காண்பது அறிவு - என்ற வள்ளுவரின் வரிகளை என்றும் மனதில் கொள்வோம்!' எனக் கூறியுள்ளார்.

Advertisment

nannilam stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe