தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது.
மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தலை கடந்த 21-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அத்துடன், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் அறிவித்தது.
இதில் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21- ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, இரு தொகுதிகளுக்கும் கடந்த 23- ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (30/09/2019) மாலை 03.00 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதை தொடர்ந்து அக்டோபர் 1- ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்குகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மேலும்அக்டோபர் 3- ஆம் தேதி மாலை 03.00 மணிவரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை 05.00 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 21- ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர்- 24 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவும்- திமுகவும் நேருக்கு நேர் மோதுகின்றன. நாங்குநேரியில் அதிமுக - காங்கிரஸும் மோதுகின்றன.
நேற்று (28/09/2019) வரை விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 8 பேரும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 12 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் இந்த தொகுதிகளில் போட்டியிட ஒரு பெண் கூட வேட்பு மனுத்தாக்கல் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புதுவை மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.