ADVERTISEMENT

நாங்குநேரிப் போராட்டம் ஆளும் கட்சிக்குக் குடைச்சல்... முதல்வரும் பிரதமரும் அறிவித்ததை நிறைவேற்றவில்லை...

08:39 AM Sep 28, 2019 | santhoshkumar

குடும்பன், பன்னாடி, காலாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான் மற்றும் வாதிரியான் ஆகிய உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவேந்திர குல வேளாளர் மக்கள் வாழும் 20 கிராம மக்கள் நேற்று முதல் தங்கள் ஊர்களில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இது குறித்து தேவந்திரகுல வேளாளர் பருத்திக்கோட்டை நாட்டார்கள் சமுதாயங்களின் செயலாளர் சிதம்பரம் சொல்வது, எங்கள் சமூகம் நாங்குநேரி தொகுதியின் மூன்று யூனியன்களிலும் அடங்கியுள்ளன. 55 ஆயிரம் வாக்குகள் உள்ளன. பல மாதங்களாக நாங்கள் இந்தக் கோரிக்கையை வைத்து வருகிறோம். சென்னை பல்கலைகழகத்தினர் ஆய்வு செய்தனர். அந்த அறிக்கை மாநில அரசு வசம் உள்ளது. மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய அந்த அறிக்கையை அனுப்பவில்லை.

கடந்த எம்.பி. தேர்தல், ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் கூட முதல்வர் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்றார். மதுரை பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும், இந்தப் பகுதியின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என்றும் பேசினார். எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்கவே, இந்தக் கருப்புக்கொடி போராட்டம் முடிவு தெரியும் வரை புறக்கணிப்பு என்றார்.

தொகுதியின் வாக்கு வங்கியில் மூன்றாம் நிலையிருக்கும் இம்மக்களின் போராட்டம் விரிவடையத் தொடங்கியிருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT