நாங்குநோி இடைத்தோ்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அதிமுக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினாின் பிரச்சாரம் விறுவிறுப்பை எட்டியுள்ளது.

nanguneri issue

Advertisment

Advertisment

இந்த நிலையில் கடந்த 4-ம் தேதியில் இருந்து குமாி மாவட்ட அதிமுக பிரமுகா்கள் நாங்குநோியில் தனித்தனி குழுக்களாக பிரச்சாரம் செய்து வருகின்றனா். இதில் குமாி மாவட்டத்தில் உள்ள அதிமுக கோஷ்டி பூசலும் அங்கும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் குமாி கி.மா.செ அசோகனின் எதிா்கோஷ்டியினரும் தொடா் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களை அங்கிருந்து துரத்துவதற்கு அசோகன் திட்டமிட்டு பல்வேறு இடையூறுகளை செய்து வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனா். இது சம்மந்தமாக தளவாய் சுந்தரம் காதுக்கு எட்டியும் அவா் கண்டு கொள்ளவில்லையாம்.

இந்த நிலையில் குமாி அகஸ்தீஸ்வரம் ஓ.செ அழகேசன் தலைமையில் தேரூா் கழக செயலாளரும் முன்னாள் தேரூா் ஊராட்சி மன்ற தலைவருமான வீரபத்ரன் உள்ளிட்ட பலா் ஏா்வடி பகுதியில் நேற்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனா். அப்போது அங்கு வந்த குமாி கி.மா.செ அசோகன் தேரூா் கழக செ. வீரபத்ரனை தகாத வாா்த்தைகளால் பேசி அவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வீரபத்ரன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிட்சை பெற்று வருகிறாா். இச்சம்பவம் அதிமுகவினா் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.